ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு!!!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 08:32 pm
thousands-stranded-as-fresh-landslide-blocks-jammu-srinagar-highway

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவினால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் உள்ள ரம்பன் நகரில் அமைந்துள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, அப்பகுதியில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவினால், 13 மணி நேரமாக மூடப்பட்டிருந்ததை தொடர்ந்து, மீட்பு பணியாளர்களின் பல நேர உழைப்பிற்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.  

இதை தொடர்ந்து, திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஐம்முவை இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையும் தற்போது மூடப்பட்டுள்ளது.

முன்னரே ஏற்பட்ட நிலச்சரிவினால் வெகுவான பாதிப்புக்குள்ளாகி இருந்த மக்கள், இரண்டாவது முறையாக ஏற்பட்டிருக்கும் இந்த சரிவினால் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். 

இது குறித்து கூறும் மீட்பு பணியாளர்கள், 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் மீண்டும் ஓர் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இந்த  நிலச்சரிவினால் ஆயிரக்கணக்கான மக்களும், வாகனங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனமழை காரணமாக, ஜம்மு பிரதேசத்தில், பூஞ்ச் மற்றும் ராஜௌரி பகுதிகளை இணைக்கும் முகல் சாலையும் 5வது நாளாக தொடர்ந்து மூடப்பட்டிருப்பதை தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் ஜம்மு காஷ்மீர் மக்கள். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close