மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி!!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 09:58 pm
forgot-irctc-id-password-here-s-what-you-can-do

தட்கல் ரயிலில் முன்பதிவு செய்வதற்காக கடந்த மாதம் புதிய விதிமுறைகளை பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, மறந்துபோய் விட்ட அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற முறையும் தற்போது கூறியுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.,

சரியான பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்கள் உள்ள உள்நாட்டு குடியிருப்பாளர்கள் உட்பட சர்வதேச பயணிகளுக்கும் உதவும் வகையில், ரயில்வே டிக்கெட் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்கி வருகிறது மத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.,

எனினும், இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., விதிக்கும் ஒரே நிபந்தனை, அதன் வலைதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயனிகள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். இதில் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரே ஓர் கணக்கை மட்டுமே உருவாக்க முடியும்.

 பல நாட்களாக டிக்கெட் பதிவு மேற்கொள்ளாத பயணிகள் தங்களின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறப்பது வெகு சாதரணமாக நிகழ்கிறது. இதனால், அவசரமாக டிக்கெட் பதிவு செய்ய விரும்பும் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு ஓர் தீர்வு காண விரும்பிய ஐ.ஆர்.சி.டி.சி., அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மீட்டெடுப்பதற்கான புதிய வழிமுறையை தற்போது வெளியிட்டுள்ளது.

1. ஐ.ஆர்.சி.டி.சி., ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்துவிட்ட பயனர்கள், அதன் வலைதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் "பயனர் ஐடியை மறந்துவிட்டீர்களா" அல்லது "பயனர் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா" என்ற வசதிகளை பயன்படுத்தி தங்களின் சான்றிதழ்களை திரும்ப பெற முடியும்.

2. ஐ.ஆர்.சி.டி.சி., யின் டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான www.irctc.co.in வின் பக்கத்திற்கு சென்று, அதன் வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் "உள்நிழைவு" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

3. அதை தொடர்ந்து உள்செல்லும் பக்கத்தில், "பயனர் ஐடியை மறந்துவிட்டீர்களா" அல்லது "பயனர் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா" போன்ற வசதிகளை பயன்படுத்தி ஐடி மற்றும் பாஸ்வேர்டை திரும்ப பெறலாம்.

4. ஐ.ஆர்.சி.டி.சி., யின் ஐடியை புதுபிக்க விரும்பும் மக்கள், பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளீட செய்ய வேண்டும் 

5. ஐ.ஆர்.சி.டி.சி., யின் பாஸ்வேர்டை புதுபிக்க விரும்பும் மக்களும், ஐ.ஆர்.சி.டி.சி., யின் ஐடியை புதுபிக்கும் முறையே பின்பற்றி புதுபித்து கொள்ளலாம்.

6. இந்த செயல்முறைகளை தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி., யின் அனைத்து தொடர்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதன் மூலம் பயனர்கள் அவர்களின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மீட்டெடுக்க முடியும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close