சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 08:48 am
arvind-sawant-i-am-resigning-from-my-ministerial-post

சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்கு பிறகு தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சிவசேனா மறுப்பு தெரிவித்தது. இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க போவதில்லை என கட்சியின் மாநிலத் தலைவர் நேற்று அறிவித்தார். இந்நிலையில், மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது.

சிவசேனா கட்சிக்கு ஆதரவு தேவையெனில் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இதையடுத்து சிவசேனாவை சேர்ந்த மத்திய கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் மத்தியிலும் கூட்டணி முறிந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று ஆதரவு தெரிவித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close