வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்!!!

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 09:50 am
rss-sarsanghachalak-dr-mohan-bhagwat-met-sr-counsel-of-supreme-court-k-parasaran

அயோத்தி வழக்கில் சரித்திரப்பூர்வ சான்றுகளை வைத்து சிறப்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் பராசரனை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

ராமஜன்ம பூமி மீதான உரிமம் தொடர்பான வழக்கு கடந்த 1949ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது. கடந்த 2012ஆம் ஆண்டில் ராமஜன்ம பூமி அமைந்துள்ள இடத்தை மூன்று பாகங்களாக பிரித்து ஹிந்துக்கள் மற்றும் சன்னி வக்ஃப் போர்டு ஆகியோருக்கு வழங்குதாக அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து சன்னி வக்ஃப் வாரியம் உட்பட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் மீதான இறுதி விசாரணை தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ராம் லால்லா அமைப்பின் சார்பாக ஆஜரான 92 வயதான மூத்த வழக்குரைஞர் பராசரன் பல்வேறு சரித்திரபூர்வமான சான்றுகளையும், வாதங்களையும் தெளிவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பாக எடுத்துரைத்தார்.

இறுதியில் வழக்கின் தீர்ப்பு ஹிந்துகளுக்கு சாதகமாக வெளிவந்தது. பல வழக்குரைஞர்கள் ஹிந்துக்கள் மற்றும் ராம் லாலா சார்பாக வாதிட்டிருந்தாலும், பராசரனின் வாதங்கள் எதிர்த்தரப்பின் வாதங்களை முடக்கும் வகையில் இருந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு  நல்லபடியாக வெளிவந்ததை பாராட்டும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகியோர் டெல்லியிலுள்ள பராசரனை அவருடைவிட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஹிந்துக்களின் சார்பாக அவர்களுடைய நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close