ரஃபேல் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

  அனிதா   | Last Modified : 14 Nov, 2019 11:23 am
supreme-court-dismisses-rafale-review-petitions-against-its-december-14-2018-judgement

ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மறைகேடு இல்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.14ல் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டது. 

இந்நிலையில், இன்று இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட 3 பேர் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close