இயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்!!!

  அபிநயா   | Last Modified : 14 Nov, 2019 03:10 pm
srinagar-limping-back-to-normalcy

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுபாடுகள் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, ஸ்ரீநகர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டு, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, பயங்கரவாத நடமாட்டங்கள் அதிகரித்து காணப்பட்டதால், பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பலத்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இதன் ஓர் பகுதியாக பல தலைவர்களும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுபாடுகள் ஒவ்வொன்றாக நீக்கப்படும் என்று கூறியிருந்தது மத்திய அரசு.

அதன்படி, ஜம்மு காஷ்மீருக்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்ற கட்டுப்பாட்டை நீக்குமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து, போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளும் திரும்ப அளிக்கப்பட்டன. எனினும், பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், பெற்றோர்களின் பயத்தினால் பள்ளி வளாகங்கள் குழந்தைகளால் இனியும் நிரம்பவில்லை. உள்ளபோதும், 10, 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் வழக்கபோல நடைபெறும் என்று கூறியுள்ளது மாநில அரசு.

இதை தொடர்ந்து, இன்டர்நெட் வசதிகள் இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலையிலும், அரசாங்க பேருந்துகள், தனியார் வாகனங்கள் என சாலையில் வாகன நடமாட்டங்கள் காணப்படுவதுடன், பல மணி நேர கடை திறப்பும் ஸ்ரீநகர் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. இதனிடையில், வெகு விரைவில் இன்டர்நெட் சேவைகளும் வழங்கப்படும் எந்று கூறியுள்ளது மத்திய அரசு.

சுமார் 3 மாத காலத்திற்கு பிறகு வாகனங்கள் நிறைந்து காணப்படும் சாலைகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் ஜம்மு காஷ்மீரை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர் காஷ்மீர் மக்கள். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close