மிகப்பெரும் இழப்பை சந்தித்து இருக்கும் வோடபோன் ஐடியா!!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 11:11 pm
vodafone-idea-posts-massive-q2-loss-at-rs-50-921-crore-highest-ever-quarterly-dip-in-india

இந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டிற்கான வருவாய் 42 சதவீதமாக உயர்ந்து, ரூ. 11,146.4 கோடி ரூபாயாக உள்ள நிலையில், கடந்த ஆண்டிற்கான காலாண்டின் இறுதியில், ரூ.4,874 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்த வோடபோன் ஐடியா தொலைதொடர்பு சேவை நிறுவனம், இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு நிலவரப்படி, சுமார் ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

இதனிடையில், வோடபோன் ஐடியாவின் பிஎஸ்இ பங்குகள், 20.27 சதவீதம் குறைக்கப்பட்டு, வெறும் 2.95 சதவீதமே உள்ளதாக தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, தேசிய பங்கு சந்தையில் 18.92 சதவீதம் குறைந்து 3 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களில் எந்த ஒரு நிறுவனமும் இத்தகைய இழப்பை சந்தித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஓர் காரணமாக  குறிப்பிடும் வோடபோன் ஐடியா தொலைதொடர்பு சேவை நிறுவனம், இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவில் அதன் எதிர்காலத்தை தொடர முடியுமா என்ற சந்தேக நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close