மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்!!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 04:18 pm
wife-not-home-come-and-cook-hostel-warden-calls-girl-student-at-midnight

உத்தரகண்ட் மாநிலம் : பண்ட் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இல்லை என்ற காரணம் கூறி அப்பல்கலைகழக மாணவி ஒருவரை சமைத்து தருமாறு நள்ளிரவில் போனில் அழைத்துள்ள சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும், விடுதி காப்பாளராகவும் பணிபுரிபவர், ராத்திரிகளில் போனில் அழைத்து தன்னை விடாமல் தொந்தரவு செய்வதாகவும், அவர் மனைவி வீட்டில் இல்லை என்ற காரணம் கூறி தன்னை சமைப்பதற்கு அழைப்பதாகவும் அப்பல்கலைகழக துணை தலைவரிடம் குற்றம் சுமத்தியுள்ளார் அங்கு படிக்கும் ஓர் மாணவி. இவருக்கு ஆதரவாக அப்பல்கலைகழக பெண்கள் அனைவரும் குரல் எழுப்பியுள்ளனர். எனினும், இவரின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும், பல்கலைகழக நிர்வாகம் இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கை குறித்த விசாரணையில் ஈடுபடுமாறும், குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியரை பணி நீக்கம் செய்யுமாறும் அப்பல்கலைகழக துணை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா. எனினும், இது குறித்த பள்ளி நிர்வாகிகள் கூறுகையில் அவரை கடந்த மாதமே வேலையை விட்டு நீக்கி விட்டதாக தெரிவிக்குள்ளனர்.

மேலும், இத்தகைய சம்பவங்கள் இனி பல்கலைகழக வாயிலுக்குள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை என்றும் கூறியுள்ளார் ஆளுநர் பேபி ராணி மௌரியா.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close