பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கிய மிக்.29 போர் விமானம்: விமானிகள் பத்திரமாக மீட்பு

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 02:24 pm
a-mig-29k-fighter-aircraft-crashed-in-goa

பயிற்சி பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் மிக் 29 கே போர் விமானம் இன்று கோவாவில் இருந்த புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவா, டபோலிமில் ஐ.என்.எஸ் ஹன்சாவிலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட மிக் 29 கே போர் விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த கேப்டன் எம் ஷியோகண்ட் மற்றும் லெப்டன் சி.டி.ஆர் தீபக் யாதவ் ஆகியோர் பாதுகாப்பாக பாராசூட்டில் வெளியேற்றப்பட்டதாக கடற்படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் திறந்த வெளியில் விழுந்து நொறுங்கியதையும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட விமானிகள் ஒரு குடியிருப்புப் பகுதியில் தரையிறங்கியதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது. 

என்ஜின் செயலிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை, ஆனால் சில அறிக்கைகள்  பறவை தாக்கியதால் என்ஜின் செயலிழந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close