பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது!!!

  அபிநயா   | Last Modified : 16 Nov, 2019 09:59 pm
pmc-bank-case-rajneet-singh-former-director-and-son-of-former-bjp-mla-arrested

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவின் மகன் ரஜ்நீத் சிங் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், கணக்காளர்களான ஜயேஷ் சங்கானி மற்றும் கேதன் லக்தாவா இருவரும், மோசடி ஏற்பட்ட போது பிஎம்சியில் கணக்காளர்களாக பணியாற்றியதாகவும், வங்கியின் மோசடிகளை அவர்கள் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த வாரம், பொருளாதார குற்ற பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து, அவ்வங்கியின் இயக்குநரும், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவின் மகனுமான ரஜ்நீத் சிங் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close