நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது!

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 09:22 am
parliament-winter-meeting-series-begins-today

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 

நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. 20 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில்,  உள்நாட்டு உற்பத்தி வரியைக் குறைக்கும் அவசர சட்டமும், இ-சிகரெட்களின் விற்பனை தயாரிப்புக்கு தடை விதிக்கும் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றான மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொடரில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதன் முறையாக இந்த தொடரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close