எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 10:58 am
opposition-parties-need-to-act-creatively-pm-request

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. 20 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இந்தாண்டின் நிறைவு கூட்டத்தொடர் ஆகும் எனவும், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சிறப்பாக அமைந்ததது போன்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close