ராணுவ வீரர்களின் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது: ராஜ்நாத் சிங்

  அனிதா   | Last Modified : 19 Nov, 2019 09:03 am
soldiers-death-is-painful-rajnath-singh

சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் அதிர்வால் பனிச்சரிவு ஏற்பட்டு 6 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்டர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து  அருகில் உள்ள முகாமில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனிச்சரிவில் சிக்கிக்கொண்ட 8 பேரையும் மீட்டனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 6 பேர் (4 ராணுவ வீரர்கள், 2 போர்டர்கள்) உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தைரியத்துடன் நாட்டுக்காக சேவையாற்றிய வீரர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close