இந்தியாவின் முத்தரப்பு சேவைகளுக்கு தலைமை ஏற்கும் முதல் பாதுகாப்பு தளபதி!!!!

  அபிநயா   | Last Modified : 19 Nov, 2019 02:45 pm
india-s-first-chief-of-defence-staff-will-direct-three-service-chiefs

கூடிய விரைவில், இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் ஒய்வு பெறவுள்ளதை தொடர்ந்து, வரும் வாரம் அவருக்க பதிலாக புதிய தளபதியை அறிவிப்பதுடன், இந்தியாவின் முத்தரப்பு பாதுகாப்பு சேவைகளுக்கும் தலைமை தாங்கும் முதல் பாதுகாப்பு தளபதி யார் என்பதும் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் வரும் டிசம்பர் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக புதிய ஜெனரலை வரும் வாரத்தில் அறிவிக்கப்போவதாக வந்துள்ள செய்திகளை தொடர்ந்து, இந்தியாவின் முத்தரப்பு சேவைகளையும் தலைமை தாங்கும் முதல் பாதுகாப்பு தளபதியும் அறிவிக்கப்படுவார் என்று செய்திகள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான ராணுவ ஜெனரல் அமலாக்க குழு, வரும் வாரங்களில் நியமிக்கவிருக்கும் இந்தியாவின் முதல் பாதுகாப்பு தளபதியின் பணிகள் குறித்து இன்னும் முழுதாக வரையறுக்கப்படாத நிலையிலும், இந்த தலைமைத்துவம் குறித்து அறிந்த சிலர் கூறுகையில், கே.சுப்ரமணியம் தலைமையிலான கார்கில் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, ராணுவத்துறைக்கும், அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரே புள்ளியாக இவர் திகழ்வார் என்று கூறுகின்றனர். 

ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் பதவி, பாதுகாப்பு பணியாளர்களின் துணை பாதுகாப்பு தலைவராக மாற்றப்படவுள்ள நிலையில், நியமிக்கப்படவிருக்கும் பாதுகாப்பு தளபதி, தற்போது இயங்கி கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் குழு உட்பட, ராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற முத்தரப்பு படைகளுக்கும் தலைவராக பணியாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த பொறுப்புகளை தொடர்ந்து, கூடுதல் பொறுப்புகளாக ராணுவத்தின் முக்கிய கோட்பாடாக கருதப்படும், முத்தரப்பு சேவைகளின் தளபதியாகவும், திறன்கள் மற்றும் ஒருங்கிணைப்பு தலைவராகவும் பாதுகாப்பு தளபதி பணியாற்றுவார் என்று கூறப்படுகின்றது. 

நியமிக்கப்படவிருக்கும் புதிய பாதுகாப்பு தளபதி, முத்தரப்பு சேவைகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் நான்கு நட்சத்திரங்களுடன், இந்திய ராணுவத்தின் இதயமாக செயலாற்றுவதோடில்லாமல், எதிர்கால ராணுவத்திற்கு தேவையான அனைத்தையும் மேற்கொள்ளும் பொறுப்பு இவருக்கு இருக்கும் என்று கூறுப்படுகின்றது.   

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், சீனா ஏற்கனவே தங்களது ராணுவத் தளத்தை பலப்படுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாது பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான அத்துமீறல்களையும் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும், தங்களது ராணுவ படைகளை பலப்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் ராணுவமும் பலமுடன் செயல்படவேண்டியது மிகவும் அவசியம்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close