தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் - அமித் ஷா அறிவிப்பு!!!

  அபிநயா   | Last Modified : 20 Nov, 2019 04:30 pm
nrc-will-be-carried-out-nationwide-no-one-should-be-worried-amit-shah

அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் இன்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு, இந்தியர்களை குடிமக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான ஓர் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அசாமில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய குடியுரிமை பட்டியல், இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் எந்த மதத்தவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நோக்கத்துடனும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய குடியுரிமைப் பதிவேட்டை பராமரிக்க தொடங்கியது அம்மாநில அரசு. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை பதிவேட்டின் படி, பதிவு செய்திருந்த 3,30,27,661 பேரில், சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதை தொடர்ந்து, இந்த இறுதி பட்டியலில் இடம்பெறாதவர்கள், குடியுரிமை தீர்ப்பாயத்தில் மனு சமர்ப்பிக்கலாம் என்றும் அப்படியும் தனது குடியுரிமையை நிரூபிக்க இயலாதவர்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close