ஓய்வுபெற்றதையடுத்து வீரர்களாக விடைபெற்ற மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய்கள்!!!

  அபிநயா   | Last Modified : 20 Nov, 2019 05:00 pm
born-as-a-dog-retired-as-a-soldier-cisf-honours-canines-on-retirement

மத்திய தொழில்முறை பாதுகாப்பு படையினருடன் இணைந்து சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய்கள், கடந்த செவ்வாயன்று முழு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.

டெல்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டு பணியாற்றிய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரின் ஓர் பகுதியாக விளங்கிய 7 மோப்ப நாய்கள் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றன.

 

— CISF (@CISFHQrs) November 20, 2019

 

இதனை தொடர்ந்து, இவைகளின் நீண்ட கால சேவையை பாராட்டி டெல்லி மெட்ரோவின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஓய்வு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் வீரர்களாக விளங்கிய 7 நாய்களுக்கும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியதோடு மட்டுமில்லாமல், அவைகளை பாராட்டி, நினைவு பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர் சி.ஐ.எஸ்.எஃப் படையினர். 

 

— CISF (@CISFHQrs) November 20, 2019

 

வரலாற்றிலேயே முதன் முறையாக நாய்களுக்காக ஓய்வு விழா கொண்டாடிய முதல் பிரிவாக, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் குழு பெயர் பெற்றுள்ளது.

 

— CISF (@CISFHQrs) November 20, 2019

 

மேலும், இந்த 7 மோப்ப நாய்களின் 8 ஆண்டு கால சேவையை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தன்னலமற்ற இந்த மோப்ப நாய்களுக்கான விழா வெகு சிறப்பாக நிறைவு பெற்றதை தொடர்ந்து, இவை ஏழும் டெல்லியை சேர்ந்த ஓர் தன்னார்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close