ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ!!

  அபிநயா   | Last Modified : 20 Nov, 2019 06:26 pm
after-airtel-and-vodafone-idea-reliance-jio-to-hike-mobile-tariffs

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான கட்டணங்களை வரும் வாரங்களில் உயர்த்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை அடுத்த மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன்  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்தவிருக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா சேவை நிறுவனங்கள் இரண்டும், இந்த ஆண்டிற்கான காலாண்டின் முடிவில் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கும் நிலையில், இவ்விரு நிறுவனங்களில் இழப்புகள் மொத்தமாக 74,000 கோடி ரூபாயை தொட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close