தொடர் எதிர்ப்பையடுத்து வீடு திரும்பும் ஃபெரோஸ் கான்: அவருக்கு ஆதரவளிக்கும் பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள்!!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 02:01 pm
as-muslim-sanskrit-professor-leaves-for-home-bhu-students-come-out-in-his-support

சமஸ்கிருத பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, வீடு திரும்பிய ஃபெரோஸ் கானிற்கு ஆதரவாக சில மாணவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

பனாரஸ் பல்கலைகழகத்தில், கடந்த 7ஆம் தேதி, சமஸ்கிருத போராசிரியராக டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்தை தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இந்நிலையில், சமஸ்கிருத பாடத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றும், தனது மதத்தை காரணம் காட்டி போராட்டம் மேற்கொள்ளப்படுவதால் மன உளைச்சலுக்குள்ளான அவர், தனது சொந்த ஊரான ஜெர்பூருக்கே சென்று விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் கூறியுள்ளது. இதுவரை அவருக்கு எதிராக சுமார் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடரப்பட்டு வந்த நிலையில், தற்போது இவருக்கு ஆதரவாக அப்பல்கலைகழக மாணவர்கள் சிலரே குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் மட்டுமல்லாது பல்கலைகழக ஆசிரியர்கள் பலருமே இவருக்கு ஆதவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா?

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close