நாடாளுமன்ற பாதுகாப்புத் குழுவில் உறுப்பினராகும் பிரக்யா தாக்கூர்!!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 03:40 pm
pragya-thakur-nominated-to-parliamentary-panel-on-defence

நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை குழுவிற்கு, மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டுப்பட்டு அதிலிருந்து விடுதலையாகி, தற்போது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் பிரக்யா சிங் தாக்கூர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கும் 21 பேர் கொண்ட நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை ஆலோசனை குழுவிற்கு போபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா சிங் தாக்கூர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து, மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிக முக்கிய நபரான பிரக்யா தாக்கூர் பாதுகாப்பு குழுவிற்கு பரிந்துரைக்கப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும், மத்திய அரசின் இத்தகைய செயல்கள், நாடாளுமன்றத்திற்கு அவபெயர் ஏற்படுத்தி தரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி எதிர்கட்சியான காங்கிரஸ் தரப்பிலிருந்து இவரது பரிந்துரைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாலேகான் வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தேசிய புலனாய்வு முகமை திரும்பப் பெற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு, மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குக்ள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு தான், இவரின் பரிந்துரைக்கு எதிராக தற்போது காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close