என்.ஆர்.சி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு அசாதுதின் ஒவாயிஸி கண்டனம்!!!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 05:37 pm
aimim-chief-asaduddin-owaisi-slams-bjp-for-assam-disowning-nrc

தேசிய குடியுரிமைப் பதிவேடு அமல்படுத்தியதன் வாயிலாக அசாம் மக்களை சிரமத்திற்குள்ளாக்கியதை போல, தற்போது இந்தியர்கள் அனைவரையும் சிரமத்திற்குள்ளாக்க அமித் ஷா முயல்வதாக அசாதுதின் ஒவாயிஸி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடெங்கிலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை செயல்படுத்தவிருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பதிவேட்டின் மூலம் அசாம் மக்களை சிரமத்துக்குள்ளாக்கியதை தொடர்ந்து, தற்போது இந்தியர்கள் அனைவரையும் சிரமத்துக்குள்ளாக்க அமித் ஷா முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதின் ஒவாயிஸி.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது, அசாமில் இறுதியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பல தவறுகள் உள்ளதாகவும், குடிமக்கள் பலரது பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக குடியேரிய பலரது பெயர்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அம்மாநில நிதியமைச்சர் ஹீமந்தா பிஸ்வா, மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்த பதிவேட்டை ரத்து செய்யுமாறு அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close