டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் : மாணவர்கள் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்!!

  அபிநயா   | Last Modified : 22 Nov, 2019 04:34 pm
section-of-jnu-teachers-condemns-student-protests-over-reports-of-violence-and-hooliganism

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் கட்டண உயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, அப்பல்கலைகழகத்தின் ஆசிரியர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறி 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இந்நிலையில், கட்டண அதிகரிப்பை வாபஸ் வாங்குவதாக பல்கலைகழக செயலாளர் அறிவிப்பு விடுத்திருந்ததை தொடர்ந்தும் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், கட்டண உயர்வு வாபஸ் வாங்கப்படவில்லை என்றும், சிறு மாறுதலே செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போராட்டத்தினால் பல்கலைகழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாகவும், படிக்க விரும்பும் மாணவர்களை மற்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்த முயல்வதாகவும் குறிப்பிடும் அப்பல்கலைகழக ஆசிரியர்கள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close