மகாராஷ்டிரா முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 09:02 am
pm-modi-congratulates-maharashtra-chief-minister-and-deputy-chief-minister

மகாராஷ்டிர முதலமைச்சராக பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், கூட்டணி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலானது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெரும் திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக மீண்டு பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் பாடுபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

— Narendra Modi (@narendramodi) November 23, 2019

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close