வங்கி என்ற பெயரே சந்தேகத்தை அளிக்கிறது - நிர்மலா சீதாராமன்!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 07:42 pm
people-should-not-lose-hope-on-banks

சில வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை தொடர்ந்து, தற்போதெல்லாம் வங்கி என்று பெயருள்ள நிறுவனங்களை கண்டாலே மக்களுக்கு சந்தேகம் வர தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னை : சிட்டி யூனியன் வங்கியின் 116வது ஆண்டு விழாவில் இன்று பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டதாக கூறினார். எங்கேயோ ஓர் சிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த வங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர். 

மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் கெடுதலாக முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close