ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானியின் ராஜினாமா நிராகரிப்பு!!!

  அபிநயா   | Last Modified : 24 Nov, 2019 06:49 pm
rcom-lenders-reject-resignation-of-anil-ambani-4-other-directorscompanies

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநரான அனில் அம்பானி, இந்த மாத தொடக்கத்தில் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், அவரின் கடிதத்தை நிராகரித்துள்ளனர் அந்நிறுவன முதலீட்டாளர்கள். 

கடந்த சில மாதங்களாக, கடன் பிரச்சனையால் தவித்து வந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இயக்குநரான அனில் அம்பானி கடந்த சில நாட்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, மற்ற இயக்குனர்களான சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி, சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் வழங்குனர்கள் குழு கடந்த 20ஆம் தேதியன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் முடிவாக, அனில் அம்பானி மற்றும் மற்ற நால்வரின் ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்துள்ளதோடு, அவர்களின் பொறுப்புக்களிலிருந்து விலகாமல், வருவதை சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளது முதலீட்டாளர்கள் குழு.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close