நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 12:24 pm
parliament-adjourns-till-2-pm

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களைவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சியினர் மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close