அசாமில் பிடிபட்ட 3 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்!!!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 04:44 pm
sis-inspired-module-busted-in-assam

இந்திய தலைநகர் டெல்லியில் தாக்குதல் மேர்கொள்வதறாக அசாம் மாநிலத்தில் சாதரண நபர்கள் போல பணியாற்றி மறைவாக பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கத்தின் மூன்று உறுப்பினர்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் இன்று கைது செய்துள்ளகாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநில கோல்பாரா பகுதியில், வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மூன்று பேரை அசாம் மாநில போலீசார் இன்று கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஜமீல், முக்தார் இஸ்லாம் மற்றும் ரஞ்சித் அலி ஆகிய மூவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அசாம் மக்களை போன்றே வாழ்ந்து வரும் இவர்களில் ஒருவர் ஆதார் பதிவிடும் அலுவலகத்திலும், மற்றொருவர் டிரைவராகவும், மூன்றாவது நபர் வணிகராகவும் பணியாற்றுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து டெல்லி பிரதேச துணை கமிஷ்னர் ப்ரமோத் குஷ்வாஹா கூறுகையில், விசாரணை மூலம் இவர்களது வசிப்பிடம் மற்றும் பணிகள் குறித்தும், பயங்கரவாத அமைப்பு குறித்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஓர் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கத்துடனே இவர்கள் அசாம் மாநிலத்தில் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் நோக்கம் குறித்தும், இவர்களுடன் அசாமில் இருந்த கூட்டாளிகள் குறித்தும், தீவர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close