வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 09:31 am
bslv-c-47-successfully-launched

இந்தியாவின் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியை கண்காணிப்பதற்காக கார்ட்டோசாட்-3 என்ற புதிய நவீன செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.  இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி வரிசையில் 49 ஆவது ராக்கெட்டாக பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது 

1,625 எடை கொண்ட கார்டோசாட்-3, புவியிலிருந்து 509 கி.மீ., தொலைவிலான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்து அனுப்பும் திறன் கொண்ட கார்டோசார்-3 செயற்கைக்கோள், 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close