14 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்...

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 10:14 am
14-satellites-successfully-launch-into-space

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் ஏவபப்பட்ட 14 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. புவியிலிருந்து 509 கி.மீ தொலைவில் கார்டோசாட்-3  நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கார்டோசாட் உட்பட 14 செயற்கைக் கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சதீஷ் தவான் மையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் கைகொடுத்து ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close