அஜித்பவாரை, சரத்பவார் மன்னித்துவிட்டார்: நவாப் மாலிக் 

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 12:08 pm
it-is-a-family-matter-and-pawar-sahib-has-forgiven-him-ncp-leader-nawab-malik

தவறை உணர்ந்து திரும்பி வந்ததால் அஜித்பவாரை சரத்பவார் மன்னித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2ஆக பிரியும் நிலை உருவானது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து என்.சி.பி கட்சியின் தலைவர் சரத்பவார், அஜித் பவாரை சட்டப்பேரவை குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். இதனிடையே, நேற்றைய தினம் அஜித் பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், அஜித்பவார் தனது தவறை உணர்ந்து திரும்பி வந்ததால், சரத்பவார் அவரை மன்னித்துவிட்டதாகவும், இது அவர்கள் குடும்ப விவகாரம் என்றும் குறிப்பிட்டுள்ள என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக், அஜித்பவார் தேசியவாத காங்கிரசில் தான் உள்ளார் என்றும் அவரது பொறுப்பு மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close