ப.சிதம்பரம் சாட்சிகளை கட்டுப்படுத்துகிறார்: அமலாக்கத்துறை வாதம்

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 12:10 pm
p-chidambaram-controls-witnesses-enforcement-argument

ப.சிதம்பரம் காவலில் இருக்கும் போது கூட முக்கிய சாட்சிகளை கட்டுப்படுத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தால் நிச்சயமாக சாட்சிகளை சேதப்படுத்தவும், கலைக்கவும் செய்வார் என்றும், ப.சிதம்பரம் காவலில் இருக்கும் போது கூட முக்கிய சாட்சிகளை கட்டுப்படுத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும், சாட்சிகள் சிதம்பரத்துடன் நேருக்கு நேர் வரத் தயாராக இல்லை என ஒருவர் கடிதம் எழுதியிருப்பதாக எனவே ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close