ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை பாதிக்கிறது: வெங்கையா நாயுடு

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 01:01 pm
pornography-film-affects-small-children-venkaiah

இணையதளங்களில் வெளியாகும் ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை தொடர்ந்து பாதிப்பதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். 

இணையதளத்தில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஆதரித்து பேசிய சபாநாயகர் வெங்கையாநாயுடு, இணையதளங்களில் வெளியாகும் ஆபாச காணொளிகள் சிறு குழந்தைகளை தொடர்ந்து பாதிக்கிறது. ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டு பெற்றோர்கள் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ள போதும் ஆபாச காணொளிகள் இளையதளங்களில் வெளியாகின்றன என  வருத்தம் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, ஆபாச காணொளிகள் உள்ள இணையதளங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close