இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 29 Nov, 2019 11:59 am
special-welcome-to-the-president-of-sri-lanka-gotabhaya-rajapaksa

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபருக்கு, விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று காலை டெல்லியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை அதிபர்  பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகைத்தந்தார். 

மாளிகை வந்த இலங்கை அதிபரை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கைகொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட இலங்கை அதிபர், இலங்கை - இந்தியா இடையேயான உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும், நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார். பின்னர் இருநாடுகளின் நல்லுறவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close