குரங்குகளிடமிருந்து பயிர்களை காக்க விவசாயின் புதிய யுக்தி!!

  அபிநயா   | Last Modified : 29 Nov, 2019 06:30 pm
karnataka-farmer-paints-tiger-stripes-on-dog-to-save-crop-from-monkeys

குரங்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் அவற்றிடமிருந்து பயிர்களை காப்பதற்காக ஓர் மாறுபட்ட யுத்தியை கையாண்டிருக்கறார் கர்நாடகா மாநில விவசாயி ஒருவர்.

கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் அவற்றிடமிருந்து தனது பயிர்களை காக்க விரும்பிய ஸ்ரீகந்த கௌடா என்னும் விவசாயி, புலி உருவ பொம்மைகளை சில காலம் பயன்படுத்தியுள்ளார். அந்த பொம்மைகளை காணும் குரங்குகள் அஞ்சி பயிர்களிடம் வராதிருக்கும் போதும், இதே முறையை பல நாட்கள் தொடர இயலாது என்பதை உணர்ந்த அவர், தனது நாய்க்கு புலி போன்ற வரிகள் வரைந்து வயலில் நிறுத்தியுள்ளார்.

நாயின் புலி போன்ற தோற்றத்தை கண்ட குரங்குகள் பயிர்களிடம் வருவதே இல்லையாம். இதனால் தான் கஷ்டப்பட்டு பயிரிடும் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுவதாக கூறும் ஸ்ரீகந்த கௌடா, டை உபயோகித்தே நாய்க்கு புலி வரிகள் வரைவதாகவும், 1 மாத காலம் அவை அழியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரை போன்ற மற்றொரு விவசாயி குரங்குகளிடமிருந்து பயிர்களை காப்பதற்கு நாயின் ஒலியை பயன்படுத்துகிறார். 

நாயின் ஒலியோ அல்லது புலி உருவம் வரைவதோ புதிதான முறையில்லை என்றாலும், விலங்குகளையும் பாதிக்காமல், தன்னுடைய விளைச்சலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் கௌடா போன்ற விவசாயிகள் மேற்கொள்ளும் யுத்திகளில் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close