பொருளாதாரத்தை விட வருத்தமளிக்கிறது இன்றைய சமூகத்தின் நிலை - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!!

  அபிநயா   | Last Modified : 29 Nov, 2019 09:54 pm
manmohan-singh-idea-about-indian-economic-slowdown

தேசிய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த ஓர் விரிவான உரையாடலில் ஈடுபட்டார்.

சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருக்கும் நிலையில், பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கும் விதமாக இருந்தாலும், அதை விட கவலையளிக்கும் வகையில் சமூகத்தின் நிலை உள்ளது என்று தன் வருத்தத்தை பதிவு செய்த அவர், பொருளாதாரத்தின் தற்போதைய மந்தமான நிலைக்கு சமூகத்தின் நிலையே முக்கிய காரணம் என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியில், 8 அல்லது 9 சதவீதம் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நிலையில், ஏற்கனவே இருந்த 5 சதவீதமும் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது மிகவும் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய நிலை தொடராமல் இருக்க வேண்டுமெனில், இந்தியாவின் பொருளாதார திட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிறிய மாற்றங்கள் பெரிய பலனளிக்காது என்றும் கூறியுள்ளார்.

சமூகத்தின் நிலை மாற்றமடையாமல் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படாது என்று கூறிய அவர், தற்போதைய இந்த மந்த நிலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தான் காரணம் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close