ஓலா, உபேர் விலை உயர்வுக்கான மத்திய அரசின் வழிகாட்டு அறிக்கை !!

  அபிநயா   | Last Modified : 01 Dec, 2019 03:00 pm
ola-uber-fees-may-be-capped-at-10-of-total-fare

ஓலா மற்றும் உபேர் பயன்பாட்டு டாக்சிகள், சவாரி மூலம் சம்பாதிக்கும் கமிஷனை, மொத்த கட்டணத்தில் 10 சதவீதமாக நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இதற்கான விலை 20 சதவீதமாக உள்ள நிலையில், இது போன்ற நிறுவனங்கள் சேகரிக்கும் கமிஷனை அரசாங்கம் ஒழுங்கப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். 

இதை தொடர்ந்து, மாநில அரசுகள் விருப்பப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களின் வழிகாட்டுதலுடன், டாக்சிகளின் வருவாய் மீதும் கட்டணம் வசூலிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

விலை நிர்ணயம் தொடர்பான விவகாரத்தில், அடிப்படை கட்டணத்தை அதிகபட்சமாக இருமடங்காக உயர்த்தலாம் எனவும், அதற்கான கட்டணத்தை மாநிலங்களே நிர்ணயிக்க அனுமதியுள்ளதாகவும் மத்திய அரசின் வழிகாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணம் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்பட்டு திருத்தப்படலாம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. 

எனினும், ஓட்டுநரால் மேற்கொள்ளப்படும் தினசரி சவாரிகளில் 10 சதவீத சவாரிகளுக்கு மேல், அதிகப்படியான கட்டண விலை வசூலிக்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அவை முறைப்படுத்தப்படும் என்று கூறப்படும் நிலையில், இதற்கான வழிகாட்டு ஆவணத்தில் விலை நிர்ணயம், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு, அபராத தொகை போன்றவையும் நிர்ணயிக்கப்பட்டு குறிப்பிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஓட்டுநர்களால் ரத்து செய்யப்படும் பயணங்களுக்கு, 10 முதல் 50 சதவீத அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு ஓட்டுநர் எத்தனை பயணங்களை ரத்து செய்யலாம் என்ற எண்ணிக்கையும் மாநில அரசே நிர்ணயிக்க அனுமதி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களை போன்றே பயணிகள் ரத்து செய்யும் சவாரிகளுக்கும் 10 முதல் 50 சதவீத அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு. 

மேலும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு சவாரிக்கும் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும், 3 மணி நேரத்திற்கு ஒருமுறை, முக அங்கீகாரம் அல்லது பயோமெட்ரிக் மூலம் பயணத்தை மேற்கொள்ளும் ஓட்டுநர் பட்டியலிடப்பட்டிருக்கும் ஓட்டுநர் தானா என்று உறுதி செய்து கொள்ளும் வசிதியை பயணிகளுக்கு வழங்கவிருப்பதாகவும் மத்திய அரசின் வழிகாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்போதைய வழிகாட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் தீர்மானங்கள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் மாநில அரசும் அதற்கு துணை நின்று செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அரசாங்கம்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close