கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றார் ஷிவாங்கி

  முத்து   | Last Modified : 03 Dec, 2019 03:53 pm
she-was-the-first-female-pilot-of-the-indian-navy

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

கடற்படையில் பெண்களை விமானிகளாக பணியமர்த்த கடந்த 2016ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவெடுத்தது. இதனைத்தொடர்ந்து, பீகாரைச் சேர்ந்த சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி கடந்தாண்டு பணியமர்த்தப்பட்டு, கடற்படை அகாடெமியில் பயிற்சி பெற்று வந்தார். 

இந்த நிலையில், தன்னுடைய பயிற்சி காலம் முடிவடைந்ததையடுத்து, ஷிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் முதல் பெண் விமானியாக பதவியேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானியாக தகுதிபெறும் ’விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்து, பதவியில் பொறுப்பேற்க செய்தார். 

இதன் மூலம், இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை ஷிவாங்கி பெற்றுள்ளார். கடற்படையின் டோர்னியர் கண்காணிப்பு விமானப் பிரிவில் ஷிவாங்கி பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close