போலீஸ்க்கு கால் பண்ணி கல்யாணத்தை தடுத்து நிறுத்திய 11வயது சிறுமி...

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 11:53 am
an-11-year-old-girl-who-has-stopped-her-marriage

உத்தரப்பிரதேசத்தில் 11 வயது சிறுமி காவல்துறையினருக்கு போன் செய்து திருமணத்தை நிறுத்தியிருக்கும் அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவே மாவட்டத்தில் பிகாபூரை சேர்ந்த 11வயது சிறுமி லட்சுமி தேவி. இவர் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், லட்சுமி தேவிக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 10ஆம் தேதி கல்யாணம் என தேதி குறித்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். 11வயது சிறுமிக்கு 28வயது மாப்பிள்ளையை சம்மதம் பேசியுள்ளனர். கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லாத லட்சுமி வீட்டில் தனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை. நான் படிக்க வேண்டும் என கூறியிள்ளார். ஆனால் சிறுமியின் பேச்சை யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை. 

இதனால் பயந்து போன சிறுமி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நேராக சென்று போனில் 112 என்ற உதவி எண்ணை டயல் செய்து எனக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்கிறார்கள். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என் விரும்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.  உடனடியாக, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும், போலீசாரும் லட்சுமியின் வீட்டுக்கு விரைந்து வந்தனர்..

லட்சுமியின் கல்யாணத்தை நிறுத்தும்படி அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறி, சிறுமியை படிக்க வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட அவரது தந்தை கல்யாணத்தை நிறுத்தியுள்ளார். தற்போது, சிறுமி மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வருகிறார். அவருக்கு ஒரு போலீஸ்காரரும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.  தன் கல்யாணத்தை, தானே நிறுத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close