கர்நாடகா இடைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 08:41 am
karnataka-by-election

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்து வருகிறது. இந்நிலையில், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், ராணிபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று தோதல் நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகள் டிச.9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த தேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், இந்த இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close