டெல்லியில் பயங்கர தீ விபத்து - 43 பேர் எரிந்து பலியான பரிதாபம்

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 10:38 am
43-dead-as-fire-building-in-delhi-s-anaj-mandi

தலைநகர் டெல்லி ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டி என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியாகி இருக்கலாம் என டெல்லி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close