மாணவிகளை கிண்டல் செய்வையா? - இளைஞரை செருப்பால் அடித்த பெண் காவலர்

  முத்து   | Last Modified : 11 Dec, 2019 09:24 am
woman-constable-thrashes-a-man

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த இளைஞருக்கு பெண் காவலர் ஒருவர் நடு சாலையில் வைத்து செருப்படி கொடுத்தார். 

அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வரும் மாணவிகளை தொடர்ந்து சிலர் கிண்டல் செய்து வருவதாக புகார் எழுந்தது.

அதன்படி அங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சிலர் மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டு காவலர்கள அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் சிக்கிய ஒரு இளைஞரை பிடித்து பெண் காவலர் தர்ம அடி கொடுத்தார். தனது காலணியை கழற்றி அடித்து துவைத்தார்.

பின்னர் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிகளை கிண்டல் செய்த இளைஞரை செருப்பால் துவைத்த பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close