12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது!

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 07:52 am
12-year-old-girl-allegedly-gang-raped-in-karnal

ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை 4 இளைஞர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச்சென்று அந்த சிறுமியை 4 இளைஞர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த சிறுமி எவ்வளவு கெஞ்சியும் போதையில் இருந்த 4 பேரும் விடாமல் தங்கள் இச்சையை தீர்த்துக்கொண்டு விட்டுச்சென்றனர். பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.  ரத்தபோக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

மேலும் அச்சிறுமி இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 4 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close