எல்லையில் பாக். ராணுவம் தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்..

  முத்து   | Last Modified : 17 Dec, 2019 10:32 am
two-army-jawans-martyred

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் வீரமரனம் அடைந்தனர். 
ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டதிற்குட்பட்ட குரிஷ் எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீதும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். இந்த அடுத்தடுத்த தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close