நித்யானந்தா கைதாவாரா..? கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 09:06 am
action-to-arrest-nithyananda

நித்யானந்தாவை கைது செய்து இந்தியா கொண்டு வர முறைப்படி விண்ணப்பம் கொடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. 

ஆசிரமத்தில் பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம், கொலை, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு புகார்களில் நித்தியானந்தா சிக்கியுள்ளார். பிடதி போலீஸ் நிலையத்தில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ராம்நகரம் நீதிமன்றத்தில் 13 வழக்குகளின் விசாரணையும் நடந்து வருகிறது. 44 வழக்குகளின் விசாரணைக்கு நித்தியானந்தா ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார்.

வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள நித்தியானந்தாவை இந்தியா கொண்டு வரும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,நித்தியானந்தா ஆசிரமத்தில் மரணமடைந்ததாக கூறப்படும் சங்கீதா என்ற மாணவியின் தாயார் ஜான்சி ராணி மற்றும் நித்தியானந்தாவால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் ஆரத்திராவ் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

அதை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், நித்தியானந்தா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், இது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற விசாரணையின் விவரம் தெரிவிக்க வேண்டும். நித்தியானந்தா வெளிநாடு தப்பியோடி இருந்தால், அவரை சட்டப்படி இன்டர்போல் மூலம் கொண்டு வரும் முயற்சியை சிபிஐ உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close