நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி சாவு.. திடீரென பேச்சை நிறுத்தியதால் சோக முடிவு.. 

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 03:40 pm
youth-suicide-in-front-of-girlfriend-s

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் புதுநகரைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் சுரேஷ் (28), புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 27ஆம் தேதி திருமணம் செய்ய  நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதுமுதல் இருவரும் தினமும் போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மணப்பெண் இவரிடம் பேசவில்லையாம். பல முறை முயற்சித்தும் அப்பெண் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சுரேஷ் தனது செல்போனில் வீடியோ கால் செய்து அதனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு மணப்பெண்ணிடம் போனில் வீடியோ கால் பேசி உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் ஸ்லீப் ஆகி ஸ்டூல் தவறி விழுந்தது. அதே நேரத்தில் அவரது கழுத்தை கயிறு இறுக்கிக்கொண்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் சுரேஷின் நண்பருக்கு போன் செய்து விபரத்தை கூறி உள்ளார். அவர் உடனடியாக சுரேஷின் வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அறையை திறக்க முயன்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சுரேஷ் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close