சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரியும், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், 93 சிறை கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டுள்ளனர்.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் தெரிவித்திருப்பது: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள சிலரின் வழக்குகளில் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அபராத தொகையை செலுத்த முடியாததால் கூடுதலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் பட்டியலில் இருந்து இந்த 93 பேர் தேர்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.