குஜராத் முதல்வராக நாளை விஜய் ருபானி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

  Sujatha   | Last Modified : 25 Dec, 2017 07:09 pm


குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியாகின. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதை தொடர்ந்து குஜராத் மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் ரூபானி மீண்டும் முதல்வராகவும்,  நிதின் படேல் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முதல்வர் விஜய் ருபானி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை பதவியேற்கிறது. காந்திநகர் சச்சிவாலயா திடலில் காலை 11.20 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

காந்தி நகரில் உள்ள சச்சிவலயா மைதானத்தில் காலை 11.20 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் என பலர் கலந்து கொள்கிறார்கள்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close