எரிபொருளை மிச்சம் செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Dec, 2017 08:58 pm

நொய்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அதில் பேசியஅவர் அவர், எரிபொருள் சிக்கனத்தைக் குறித்து உரையாற்றினார். "2022 ஆம் ஆண்டு இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது.  இங்கு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் அளவை இந்தியா குறைக்க விரும்புகிறது.  பொதுமக்களும் இதற்கு சரியான ஒத்துழைப்பு தந்தால் எரிபொருளை மிச்சம் செய்யலாம்.

 முக்கியமாக முடிந்த வரைக்கும் தனித்தனியாக அதிக பயணம் செல்வதைக் குறைத்து பொது போக்குவரத்து சேவைகளை மக்கள் பயன்படுத்தினால், பணம் மிச்சமாவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும், எரிபொருளையும் மிச்சம் செய்யலாம். தனி வாகனங்களில் செல்வதை விட பொதுபோக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை பெருமையாக நினைக்கும் நிலைக்கு நாம் வர வேண்டும் " என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close