குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் விஜய் ரூபானி! மோடி நேரில் வாழ்த்து

  Anish Anto   | Last Modified : 26 Dec, 2017 01:52 pm

குஜராத் மாநில முதல்வராக இரண்டாவது முறையாக விஜய் ரூபானி பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத்தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 99 இடங்களை கைப்பற்றிய பாஜக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மீண்டும் பெற்றது. இதைத் தொடர்ந்து புதிய அரசை தலைமையேற்று நடத்துவது யார் என்று பா.ஜ.க உயர்மட்ட குழு ஆலோசித்து வந்தது. இதன் முடிவில், ஏற்கனவே முதல்வராக உள்ள விஜய் ரூபானியையே மீண்டும் முதல்வராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் கூடி, விஜய் ரூபானியை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதனை தொடர்ந்து ரூபானி பதவி ஏற்கும் விழா காந்தி நகரில் இன்று நடைபெற்றது.


இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். குஜராத் மாநில கவர்னர் கோலி விஜய் ரூபானி உட்பட அமைச்சர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.


குஜராத் அமைச்சரவையில் இந்த முறை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளனர். தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது சுயேட்சை ஒருவர் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால், குஜராத் சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 100-ஆக அதிகரித்து உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close