இமாச்சலப் பிரதேச முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்

  Sujatha   | Last Modified : 27 Dec, 2017 07:41 am


இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக, ஜெய்ராம் தாக்கூர்(52) இன்று பதவியேற்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில், பாஜக கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 44 இடங்களை கைப்பற்றிய பாஜக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மீண்டும் பெற்றது. பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த முன்னாள் முதல்வர், பிரேம்குமார் துாமல் தோல்வியடைந்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந் தெடுக்க, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர் ஆகியோரை கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக, பா.ஜ.க, நியமித்திருந்தது. இதையடுத்து, புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இமாச்சல் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார். 

இன்று காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பலர்  இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்  சட்டசபைக்கு 5 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழு தலைவராக பதவி வகித்த இவர்,  2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close