ஹிமாச்சல் முதல்வராக ஜெய்ராம் தாகூர் பதவியேற்றார்!

  முத்துமாரி   | Last Modified : 27 Dec, 2017 12:09 pm


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெய்ராம் தாகூர் சற்றுமுன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

ஹிமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில்  பா.ஜ.க 44 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. அந்த மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமால் தோல்வி அடைந்ததால், ஹிமாச்சல் முதல்வராக ஜெய்ராம் தாகூர் தேர்தெடுக்கப்பட்டார். ஜெய்ராம் தாகூர் மண்டி மாவட்டத்தில் உள்ள சிராஜ் என்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து ஜெய்ராம் தாகூர் இன்று ஹிமாச்சல் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஹிமாச்சல் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close